சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த '2.0' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து முடித்திருக்கும் படம் - 'பேட்ட'. கார்த்திக்சுப்பாராஜ் இயக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அடுத்தடுத்து புரமோஷன் விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன் 'மரணமாஸ்...' என்ற சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது.
ரஜினி ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த அந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சில வாத்தியங்களை இசைக்க ஒரிசா மாநிலத்திலிருந்து இசைக்கலைஞர்களை வரவைத்து பதிவு செய்துள்ளார் அனிருத். இதே இசைக்கலைஞர்களை பல வருடங்களுக்கு முன்பே அழைத்து தன் இசையில் வாசிக்க வைத்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன் என்பது கூடுதல் தகவல்.