ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கேரளாவில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா படங்களுக்குத்தான் மவுசு அதிகம். சமீபகாலமாக சமுத்திரகனி, சசிகுமார், விஜய்சேதுபதி படங்களையும் கேரள மக்கள் விரும்பி பார்க்க தொடங்கியிருக்கிறார். விமல் மாதிரியான மூன்றாவது வரிசை ஹீரோக்களிடன் படம் முக்கிய நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் தான் வெளிவரும்.
ஆனால், தற்போது விமல், ஆஸ்னா சவேரி, மியா ராய் லியோன் நடித்துள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் கேரளாவில் 100 தியேட்டர்களுக்கு மேல் வெளிவர இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வருகிற 7ந் தேதி 500 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்கி உள்ள இந்தப் படம் குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். குண்டூர் டாக்கீஸ் ஆந்திராவில் நல்ல வசூலை அள்ளிய படம். ரொமாண்டிக் த்ரில்லர் வகை படம். ஆஸ்னா ஜவேரியும், மியா ராய் லியோனும் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள்.