தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இது பயோபிக் சீசன். பல திரைப்பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது.
சந்திரபாபுவின் வாழ்க்கையை தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு என்ற பெயரில் கே.ராஜேஷ்வர் எழுதியிருந்தார். அந்த புத்தகத்தின் அடிப்படையில் அதே தலைப்பில் அவரே படமாகவும் இயக்குகிறார். இதில் சந்திரபாபு கேரக்டரில் நடிக்க பிரபுதேவாவுடன் பேச்சு நடந்து வருகிறது. சந்திரபாபுவின் உடல்மொழியும், நடன மொழியும் பிரபுதேவாவுக்கு எளிதாக வரும் என்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
இயக்குனர் ராஜேஷ்வரே தனது நண்பர்கள் ரஷ்ய தங்கப்பன், ஆர்.வி.சுவாமிநான் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். நடிகை குட்டி பத்மினி நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார். படத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, கண்ணதாசன், மற்றும் சில அரசியல்கட்சி தலைவர்கள் வேடத்தில் நடிக்க ஆடிசன் நடந்து வருகிறது.