டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாய்ஸ் சித்தார்த், அவள் படத்திற்கு பிறகு கம்மர சம்பவம் என்ற மலையாள படத்தில் நடித்தார். தற்போது சைத்தான் கா பட்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தமிழில், யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார், அடுத்தபடியாக நானி நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தின் வில்லன் வேடத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறாராம் சித்தார்த்.