Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 முதல்நாள் ஓப்பனிங் இல்லாதது ஏன்.?

03 டிச, 2018 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Why-2.0-opening-collection-not-well

லைகாவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ம் தேதி வெளியாகியுள்ள படம் 2.0. இந்தியத் திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 படம், கிராபிக்ஸில் தாமதம் ஏற்பட்டதால் 3 வருடத் தயாரிப்பில் பல சோதனைகளைத் தாண்டி வெளியானது.

2.0 படத்தின் தயாரிப்பு செலவுக்கு முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையிலான வசூல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாள் சுமார் 18 கோடியும், ஆந்திரா, தெலங்கானாவில் சுமார் 18 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இந்தியில் சுமார் 20.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ரஜினி படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும். ஆனால் 2.0 படத்துக்கு முக்கியமாக 2டியில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஓப்பனிங் இல்லை. அதனாலோ என்னவோ 2.0 படத்தின் முதல் நாள் வசூல், விஜய் நடித்த சர்கார் மற்றும் மெர்சல் படங்களைவிடக் குறைவு. மேலும் இவ்வளவு பெரிய படத்தை தொடர் விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகை காலங்களில் வெளியிட்டிருக்கலாம். மேலும் கஜா புயல் பாதிப்பும் நிலவுவதால் முதல்நாள் வசூல் குறைந்ததாக கூறுகிறார்கள்.


இருப்பினும் அதற்கடுத்த, குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக 2.0 இருந்தது.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள்16வது சென்னை சர்வதேச திரைப்பட ... யார் இந்த பட்சி ராஜன்? யார் இந்த பட்சி ராஜன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

JMK - Madurai,இந்தியா
04 டிச, 2018 - 14:48 Report Abuse
JMK விஜய் / அஜித் படங்கள் இன்றுவரை ரஜினியின் எந்திரன் / கபாலி படங்களின் வசூலை (289 cr) முறியடிக்க நாக்கு தள்ளுது. இப்ப வந்த சர்க்கார் கூட இருநூறு கொடிய தண்டமுடியால (அவர்கள் மவுசு அவளவுதான் ) ஆனா 2.௦ மூன்று நாள்களில் மொத்த தமிழ் படங்களின் வசூலை தாண்டி விட்டது? தமிழ் படங்களின் வசூல் ராஜா ரஜினி மட்டுமே ? இந்த படத்தின் வசூல் சாதைனையை அஜித் / விஜய் படங்கள் தாண்டுவது என்பது கனவுல கூட முடியாது ? ஹா ஹா ஹா
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 டிச, 2018 - 13:06 Report Abuse
JMK அஜித் விஜய் படம் எல்லாம் தமிழ்நாடு / கேரளாவை மட்டும் வசூல் செய்கிறது அனா ரஜினின் படம் மட்டும்தான் தமிழ்நாடு /கேரள/ ஆந்திரா /கர்நாடக / வாடா இந்தியா / ஆல் ஓவர் வேர்ல்டு வசூல் செய்யும் ? அதனால்த்தான் இந்த படம் பத்தாயிரம் தியேட்டர்ல ரிலீஸ் செய்து இவளவு வசூல் செய்துள்ளது ? அதனால்தான் அஜித் விஜய் படங்கள் இருநூறு கோடி க்கூட தாண்ட முடிவதில்லை ? இதற்கு யாராவது மறுப்பு தெரிவிக்க முடியுமா ?
Rate this:
R Sundar - Coimbatore,இந்தியா
03 டிச, 2018 - 15:18 Report Abuse
R Sundar வசூல் 400 கோடின்னு நியூஸ் வந்திடுச்சு... தயாரிப்பாளர் தரப்புல தான் ... இது எப்படின்னா... கபாலி படத்துக்கு முதல் நாள் 250 கோடின்னு தயாரிப்பாளர் சொன்னாராம்... அப்படின்னா முதல் மூணு நாள் (வெள்ளி - ஞாயிறு) 750 கோடி ஏன் வரலை? கபாலி flop ஆனது எப்படி? இங்க 2.o க்கு இனிமே... 500, 600, 700 கோடின்னு பில்ட் -அப் குடுக்க ஆரம்பிச்சுடுவானுக. முன்பதிவு மந்தம்... ஓப்பனிங் எதிர்பார்த்த அளவு இல்லை... சனி ஞாயிறுகூட எதிர்பார்த்த கூட்டம் இல்லை... விமர்சனங்களில் positive negative கலந்து இருக்கு... அப்புறம் எப்படி 400 கோடி நாலு நாள்ல வரும்... நான் ரஜினி ரசிகன்தான்... ஆனாலும் இப்படிப்பட்ட கப்சா நியூசைப் படிக்க எனக்கே தர்ம சங்கடமா இருக்கு.
Rate this:
kalai - ,
03 டிச, 2018 - 13:58 Report Abuse
kalai 400 Cr வசூல் செய்ததாக ஒரு செய்தி வந்துள்ளதமே....உண்மை நிலவரம் என்ன ?
Rate this:
KARTHIK -  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2018 - 12:53 Report Abuse
KARTHIK why only dinamalar is talking about lesser response. why dont you give details of the next days.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in