ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற, 13ந் தேதி தொடங்கி, 20ந் தேதி வரை நடக்கிறது. இதில் 59 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் போட்டி பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிடுகிறது. 20 படங்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் அதிலிருந்து 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளது. அந்த படங்கள் வருமாறு:
1.96
2.அபியும் அனுவும்
3.அண்ணனுக்கு ஜே
4.ஜீனியஸ்
5.இரவுக்கு ஆயிரம் கண்கள்
6.இரும்புத்திரை
7.கடைக்குட்டி சிங்கம்
8.மெர்குரி
9.பரியேறும் பெருமாள்
10.ராட்சன்
11.வடசென்னை
12.வேலைக்காரன்
இந்த படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர்கள் விக்ரமன், காயத்ரி புஷ்கர், பத்திரிகையாளர் சுகந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குனர் என விருதுகள் வழங்கப்படும், சிறந்த படத்திற்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த இயக்குனருக்கு ஒரு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.