‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த ரித்விகா, பரதேசி படத்தில் அறிமுகமானார். மெட்ராஸ் படத்தில் கலையரசன் மனைவியாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு, ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து பரபரப்பானார். அழகு குட்டி செல்லம், கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை, படங்களில் நடித்தார். சமீபத்தில், டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்தார். தற்போது எம்.ஜி.ஆர் வரலாற்று படத்தில் ஜானகி ராமச்சந்திரனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் பெரிய புகழை அடைந்தார். இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராக மாறினார். இந்ததேடலில் அதிகமானோர் ரித்விகா என்ன ஜாதி என்ற தேடி இருக்கிறார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ரித்விகாவுக்கு.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் ஆவேசமாக எழுதியிருப்பதாவது: ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு, நான் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவள் என்பதால் பிக்பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு, நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று எழுதியுள்ளார்.