பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வரும் அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வருகிறார் பிரியாமணி.
இந்த நிலையில், தற்போது அவர் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், பிரியாமணி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. 2007ல் ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமவுலி இயக்கிய எமடோன்கா என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.