இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திருமணமாகி, குழந்தையை பெற்றெடுத்தாலும், ஓய்வில்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார் கரீனா கபூர். காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கிறார். படங்களில் நடிக்கும் நேரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில், 'ரேடியோ ஜாக்கி'யாக பணியாற்றி வருகிறார்; இணைய தொடர்களிலும் நடிக்கிறார்.
இதுதவிர, ஆங்கிலத்தில் தயாராகும், லெஜென்ட் ஆப் ஜங்கிள் படத்தின், ஹிந்தி பதிப்பில், மலைப்பாம்பு கேரக்டருக்கு, 'டப்பிங்' பேசியுள்ளார், கரீனா. டார்ஜான் பாணியில் தயாராகும் இந்த படத்தில், சிங்கம், கரடி, ஓநாய் போன்றவற்றுக்கு, பாலிவுட் பிரபலங்கள், 'டப்பிங்' பேசியுள்ளனர். மலைப்பாம்புக்கு குரல் கொடுத்தது குறித்து, கரீனா கூறுகையில், ''இது எனக்கு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது,'' என்றார்.