ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி திடீரென்று இறந்தார் நடிகை ஸ்ரீதேவி. அதையடுத்து அவர் நடித்து வெளியான மாம் படத்தில் அவரது நடிப்புக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் நடிப்பில் டிசம்பர் 21ந் தேதி திரைக்கு வரும் ஜீரோ படத்தில் ஸ்ரீதேவி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக அவரது கணவர் போனி கபூர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஷாரூக்கானின் ஜீரோ படத்தில், ஸ்ரீதேவி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. அதனால், ஷாரூக்கானுடன் ஒரு பாடலில் சிறிது நேரம் ஸ்ரீதேவி நடனமாடுவது போன்று நடித்திருக்கிறார். அதையடுத்து, நடக்கயிருந்த படப்பிடிப்பு கலந்து கொள்வதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். அந்த வகையில், இது ஸ்ரீதேவி நடித்துள்ள கடைசி படம் ஜீரோ என்று தெரிவித்துள்ளார்.
ஜீரோ படத்தில் ஷாரூக்கானுடன் கைத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.