Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை பற்றி வேல்முருகன்

28 நவ, 2018 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Velmurugan-about-Guniess-record

பிரபல திரைப்பட பாடகரும், நாட்டுப்புற பாடகருமான வேல்முருகன் 1415 ஒயிலாட்ட கலைஞர்களை ஒரே இடத்தில் திரட்டி ஒயிலாட்டம் ஆடச் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வேல்முருகன் மற்றும் ஸ்வரங்களின் சங்கமம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. திருநின்றவூர் ஜெயா கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், ஜேம்ஸ் வசந்தன், பாடலாசிரியர் பிறைசூடன், நடிகர் தம்பி ராமய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வேல்முருகன் கூறியதாவது : நம் தமிழ் பண்பாட்டு கலாச்சார அடையாளமான ஒயிலாட்டத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஏற்பாடு. அதோடு ஒயிலாட்ட கலை தற்போது மறைந்து வருகிறது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்கவும், இத்தனை ஒயிலாட்ட கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதை காட்டவும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். 3 மாதங்கள் கடுமையாக உழைத்து இந்த கலைஞர்களை திரட்டினோம் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in