Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா

28 நவ, 2018 - 08:35 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-about-Royalty-issue

தனது பாடல்களை பாடுபவர்கள் என்னிடம் அனுமதி பெற்று, உரிய ராயல்டி தொகையை கொடுத்துவிட்டு தான் பாட வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ :

என் பாடல்களை பாடுவதற்கு, இசையமைப்பதற்கு முன்னர் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு பாடுவது தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இதுவரை ஐபிஆர்எஸ்ஸில் உறுப்பினராக இருந்தேன். இப்போது இல்லை. என் சார்பாக வசூலித்த ராயல்டி தொகையை இனி, தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பெறும். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கியிருக்கிறேன். இதில் பாடகர்களும் அடங்குவர்.

நீங்கள் பாட, நான் இடையூறு செய்யவில்லை. நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், பாடலாம். அதற்கு பணம் கொடுக்கதேவையில்லை. கச்சேரி செய்ய பணம் வாங்குகிறீரகள் அல்லவா.? என் பாட்டை தானே பாடுகிறீர்கள், அதற்கு நீங்கள் பணம் வாங்குகிறீர்கள், அதில் எனக்கு பங்கு இல்லையா.? பாட்டே என்னுடையது என்கிறபோது, பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்ன ஒரு சிறிய தொகை, பெயருக்கு தான் கேட்கிறேன். சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறேன். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக, முன்னோட்டமாக இருக்கும். எல்லோரும் இந்த விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (105) கருத்தைப் பதிவு செய்ய
விஸ்வாசம் தியேட்டர்கள் புக்கானதுவிஸ்வாசம் தியேட்டர்கள் புக்கானது ஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை பற்றி வேல்முருகன் ஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை பற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (105)

Roopa Malikasd - Trichy,இந்தியா
05 டிச, 2018 - 17:35 Report Abuse
Roopa Malikasd உங்களின் பிறவினிலையை பார்க்காமல் இப்பெரு பட்ட வரத்தை இறைவன் அருளிய போதிலும் , "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வள வளச்சிக்கினு போகவேண்டிய எடத்துக்கு போகும்னு " சொன்ன பழமொழியை உண்மையாக்குவதை போல உங்கள் பிறவி குணத்தை வெளிப்படுத்துவது போல உள்ளது என மக்கள் பேசுகின்றார்கள்
Rate this:
KNR - Torronto,கனடா
02 டிச, 2018 - 21:12 Report Abuse
KNR இசை உலகின் பொதுவான ஒன்று... இசையமைக்க தயாரிப்பாளர் உனக்கு கூலி கொடுத்தாரே இ.ராஜா, உனக்கு வாய்ப்பளித்த அவருக்கு இதில் பங்கு உண்டா? உன் இசைக்கு பாட்டெழுதி கொடுத்த கவிஞருக்கும் பங்குண்டா? அக்கவிஞரின் பாட்டுக்கு வாயசைத்த கலைஞருக்கும் பங்குண்டா? உனக்கு ஸ்வரங்களை கற்றுக்கொடுத்த குருவிற்கு பங்குண்டா? ஏழு ஸ்வரங்களை உலகிற்களித்த போற்றி பாதுகாத்த இசை பிதாமகன்களுக்கு பங்கு தருவாயா? உன் இசையை கேட்பதற்கு உதவும் காற்றுக்கு ராயல்டி தருவாயா? இயற்கையில் எழுந்து இயற்கையில் கலக்கப் போகும் பிண்டமே உனக்கு ஞானி என முட்டாள்தனமாய் பட்டம் கொடுத்த பாவத்திற்கு உனக்கு மட்டுமே சொந்தமில்லாத இசைக்கு, ஸ்வரங்களுக்கு, ராகங்களுக்கு சொந்தம் கொண்டாடி ஆணவத்தால் அழியாதே? இசையமைத்தபோது நீ பயன்படுத்திய இசைக் கருவிகளுக்கு, அதை கண்னுபிடித்தவர்களுக்கு, அதை பதிவு செய்ய பயன்பட்ட விஞ்ஞானத்திற்கு, மின்சாரத்தை கண்டுபிடித்தவர்களுக்கு ராயல்டி கொடுத்தாயா? இந்த டகால்டி வேலையெல்லாம் செய்து நாறடித்துக்கொள்ளாதே? உன்னைத்தவிர மற்ற இசைக்கலைஞர்கள் எல்லாம் உயர்ந்த குலத்தவரே, குணத்தால். குணத்தால் ஆகுமாம் குலம்.
Rate this:
Madhu - Trichy,இந்தியா
29 நவ, 2018 - 09:36 Report Abuse
 Madhu இவர் இசையமைத்த பிரபலமான பாடலை யாராவது அபஸ்வர்மாகப் பாடி கொலை செய்தாலும் இவர் வழக்குத் தொடரலாம். அப்படித்தானே? மற்றொரு ஏமநாத பாகவதர்
Rate this:
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
29 நவ, 2018 - 06:54 Report Abuse
Palanivelu Kandasamy செய்த வேலைக்கு பணம் கிடைத்துவிட்டது. பிறகு இதில் கட்டுப்பாடு வேண்டுமா? பாடல் எழுதியவரும், பாடியவரும் ,இதைப்படத்தில் வைத்து பிரபலமாக்கியவரும் பங்கு கேட்பது எந்த வகையில் சேரும்? கட்டப்பட்ட மாளிகைக்கு கொத்தனாரும் வண்ணம் பூசியவரும் எலக்ட்ரிஷியனும் பங்கு கேட்பது போல இல்லையா?
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
29 நவ, 2018 - 05:32 Report Abuse
Siva Kumar Ilaya Raja is owner of the tune only. He is not the owner of the song. The song was written by somebody. So he cannot claim for singing the songs. If we take his argument in his own way, has he paid any royalty to some of the western music he has copied and used in movies and the songs became big hit? How many ragas he has used in his music? Has he ever paid royalty to the wonderful creators or to their heirs at anytime? When a man gets more money, his greed for money increases.
Rate this:
மேலும் 100 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in