ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சசிகுமாருடன் அசுரவதம் படத்தில் நடித்த நந்திதா, தற்போது, இயக்குநர் விஜய்யின் தேவி-2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து தெலுங்கில் தனது கைவசம் 7 படங்கள் இருப்பதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதுபற்றி நந்திதா கூறுகையில், தெலுங்கில் ஸ்ரீனிவாசா கல்யாணம் படத்திற்கு பிறகு அக்சரா, பிரேம கதா சித்ரம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதையடுத்து இன்னும் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் 7 தெலுங்கு படங்கள் உள்ளன. இதுதவிர கன்னடத்தில் மை நேம் இஸ் கிரட்டகா என்ற படத்திலும் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் நந்திதா.