தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் 'பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படம் ஏற்கனவே பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருந்தது.
சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன.
இவற்றில் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களிலும் குழப்பம் நீடிக்கிறது. ஒரு சாரர் பேட்ட பொங்கலுக்கு வராது என்கிறார்கள். ஒரு சாரர் விஸ்வாசம் வராது என்கிறார்கள்.
விஸ்வாசம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகி ஜன., 26ல் ரிலீஸாவதாக தகவல் வெளியான நிலையில், லேட்டஸ்ட் நிலவரப்படி, விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாக அதாவது ஜனவரி 10 ஆம்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் முதல் பேட்ட, விஸ்வாசம் படங்களின் டீஸர், டிரைலர், பாடல்கள் என தொடர்ச்சியாக வெளிவர உள்ளன.