பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாததினால் இந்தப் படத்தை, தற்போது 'தளபதி 63' என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். 'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படம் இது.
அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு 'தளபதி 63' படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'மெர்சல்' 2017 - ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. 'சர்கார்' 2018 - ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸானது.
2019 தீபாவளிக்கு 'தளபதி 63' வெளியாவதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் இந்தப்படத்தின் பெயர் ஜெர்ஸி 63 என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.