அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
விமல் நடித்து வரும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு. ஆஸ்னா ஜவேரி, ஆங்கில நடிகை மியா ராய் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான் நடிக்கிறார்கள். பூர்ணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது கூடவே படத்தின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
இதில் ஆஸ்னா ஜவேரி விமலுடன் மிக மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மியா ராய் மது பாட்டில், மற்றம் சிகரட்டுடன் விமலுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து மாதிரியான படமா என்ற கேள்வியை இயக்குனர் ஏ.ஆர்.முகேசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது என்கிறார் முகேஷ்.