ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பேட்ட'. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவித்தனர். பொங்கலுக்கு 'பேட்ட' படம் தவிர, 'விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன், எல்கேஜி' ஆகிய படங்களும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டன.
ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் நவம்பர் 29ம் தேதி வெளிவர உள்ள நிலையில் சுமார் 45 நாட்களுக்குள் அவருடைய அடுத்த படமான 'பேட்ட' வருவது சரியாக இருக்காது என ரஜினிகாந்த் தரப்பில் பேசப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தன்னுடைய படத்தை தனியாக வெளியிடுவதில் தான் ரஜினிகாந்த் விருப்பப்படுகிறாராம். அஜித், சிம்பு ஆகியோருடன் போட்டி போட்டு தன்னுடைய படத்தை வெளியிட ரஜினி விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் வெளிவர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பொங்கலுக்கு ரஜினியின் 'பேட்ட' படம் வருவதை பெரும்பாலான வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கூட சரியாக இருக்காது என்று சொல்லியிருக்கிறார்களாம்.
அதனால், 'பேட்ட' படத்தை பொங்கல் போட்டியிலிருந்து விலக்கி குடியரசு தினத்தன்று வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.