ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'இருவருக்கும் இடையில் காதல் என்றெல்லாம் எதுவும் கிடையாது; நல்ல புரிதல் மட்டுமே இருவருக்கும் இடையில் இருக்கிறது' என்று, நடிகர் ஆரவ்வும், நடிகை ஓவியாவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 'இருவருக்கும் இடையே ஆழமான காதல் இருப்பது போலவே, இருவரும் நடந்து கொள்கின்றனர்' என, சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் நடன நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சிக்காக, விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதையடுத்து, நடிகர் ஆரவ், ஓவியாவுக்கு வாழ்த்து தெரிவித்து, விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஓவியாவை பத்தி சொல்லணும்னா, குழந்தை மாதிரி எல்லோரையும் நம்பிடுவாங்க. கொஞ்சம் சிரிச்சு பேசுனா நம்பிடுவாங்க. குழந்தைங்க மிட்டாய் வாங்கி கொடுத்தா நம்புவாங்கல்ல. அந்த மாதிரி ஒரு குழந்தைதான். அவங்க எனக்கு மனதுக்கு ரொம்ப நெருக்கமானவங்க' என்று கூறியுள்ளார்.