ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது திருமணம் கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு அவர்களது நெருங்கிய உறவினர்களும், சில நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று தீபிகாவின் ஊரான பெங்களூருவில் அவரது உறவினர்கள், நண்பர்களுக்காக வரவேற்பு நடைபெற்றது. பிரபலமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
வரவேற்பு நிகழ்வை புகைப்படம் எடுக்க ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். அவர்களுக்கு சிரித்த முகத்துடன் பல்வேறு விதமான போஸ்களை இருவரும் கொடுத்தனர்.
அடுத்து மும்பையில் திரையுலக நண்பர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.