ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'நண்பன்' பட நாயகி இலியானா, தெலுங்கில் ஒரு காலத்தில் நல்ல உச்சத்தில் இருந்தார். அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அவருடைய முதல் படமான 'பார்பி' அவருக்கு நல்ல பெயரையும், வெற்றியையும் பெற்றுத் தந்தது. அதன் பின் அவர் நடித்த 'ரஸ்டம், முபாரக்' ஆகிய படங்கள் அவருக்கு ஓரளவிற்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
சுமார் 6 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் ரவி தேஜா ஜோடியாக நடித்தார். ஆனால், படம் எதிர்பாராமல் படுதோல்வி அடைந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தெலுங்கில் நடிப்பேன் என இலியானா ஏற்கெனவே கூறியிருந்தார்.
இப்போது படம் தோல்வியடைந்து விட்டதால் அவர் மீண்டும் பாலிவுட்டிற்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கும் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை. தற்போது ஜான் ஆபிரஹாம் ஜோடியாக 'பகல்பான்டி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே அவருக்குக் கிடைத்துள்ளது.