டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலிக்கு இயக்குனர் ஷங்கர் மீது தனி மரியாதை உண்டு. ஷங்கர் படங்களைப் பார்த்து நிறையவே கற்றுக் கொண்டேன் என்று கூட அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் ராஜமவுலி செய்த சாதனையை ஷங்கர் இன்னும் செய்யவில்லை. '2.0' படம் அந்த சாதனையை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் எந்த ஹிந்தி நடிகரும் இல்லை. இருப்பினும் அந்தப் படங்கள் வட இந்தியாவில் பெரிய வெற்றியைப் பெற்றன.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள '2.0' படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். அதனால், அந்தப்படம் வட இந்தியாவில் தனி கவனம் பெற்றுள்ளது. எனவே தான், ராஜமவுலியும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஹிந்தி நடிகர் ஒருவர் இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். மேலும், ஒரு ஹிந்தி நாயகியையும் படத்தின் நாயகியாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.