டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன், பார்வதி மேனன், அர்ச்சனா உட்பட பலர் நடிக்க, இந்த படத்தில் வில்லனாக சுனில் என்ற புதுமுமம் நடித்துள்ளார்.
இந்த சுனில் யார் தெரியுமா? நடிகர் வைபவின் மூத்த சகோதரர்தான் சுனில்!
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் 'பக்ஸ்' என்ற கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அந்த அளவுக்கு இந்த படத்தில் சுனில் ஏற்றிருக்கும் வில்லன் கதாபாத்திரம் பேசப்படும்'' என்று கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன். தன்னுடைய அண்ணன் வில்லன் நடிகராக வெற்றியடைவார் என்ற நம்பிக்கையில், வெங்கட்பிரபுவின் அடுத்தப் படத்தில் சுனிலுக்கு வில்லன் வாய்ப்பு கேட்டிருக்கிறார் வைபவ்.
அனேகமாக சிம்புவை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சுனில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.