இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இப்போது 'அலாவுதீனின் அற்புத கேமரா' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'அக்னிச் சிறகுகள்' என்ற படத்தை இயக்க உள்ளார் நவீன்.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள். டி.சிவாவின் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை அண்மையில் கமல்ஹாசன் வெளியிட்டார்.
'பிச்சைக்காரன்', சைத்தான், எமன், 'காளி', 'திமிரு புடிச்சவன்', 'கொலைக்காரன்' என்று நெகட்டிவ்வான டைட்டில்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு இப்படத்தின் டைட்டில் வித்தியாசமாக அமைந்துள்ளது!
இந்தப்படத்தில் நடிக்கும்போது வேறு படத்தில் நடிக்க வேண்டாம்... இப்படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை வேறு சிந்தனையே இருக்கக் கூடாது என்று சொன்ன நவீன், அக்னிச்சிறகுகள் படத்துக்காக விஜய் ஆண்டனியில் பாடிலாங்வேஜை முழுமையாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இந்தப்படத்தில் வேறு ஒரு விஜய்ஆண்டனியைப் பார்க்கலாம் என்கிறாராம் நவீன்.