பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள இயக்குனர்களில் வித்தியாசமான படங்களைக் கொடுப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் இயக்குனர் மிஷ்கின். 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க 'சைக்கோ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார்.
படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிஷ்கின் கூறியிருப்பதாவது, “நான் படங்களை இயக்குவதற்குக் காரணமே இளையராஜா தான். இதை எந்த வெட்கமும் இல்லாமல் சொல்வேன். 'சைக்கோ' படத்தின் கதையை எழுதியதும் இளையராஜாவைத்தான் தேடிப் போனேன். அவர் மட்டுமே இந்த மாதிரியான படத்திற்கு பொருத்தமாக இசையமைக்கக் கூடியவர். சைக்கோ என்றாலே தமிழ் சினிமாவில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதை என்னுடைய 'சைக்கோ' மாற்றும்,” என்று கூறியிருக்கிறார் மிஷ்கின்.