சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சின்னத்திரை நாடகங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து, கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் 'மான்ஸ்டர்' மற்றும் அதர்வாவின் 'குருதி ஆட்டம்' ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.
இந்த நிலையில், புதிய 'வெப் சீரிஸ்' ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில், பரத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து, சினிமா நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் நடிப்பது குறித்து யோசித்து வருகின்றனர்.