ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன். கிராம மனம் கமழும் ஏராளமான பாடல்களையும், கானா பாடல்களையும் பாடியிருக்கிறார். இவர், ஒயிலாட்டத்தில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : தமிழின் பெருமையும், தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் விதமாக ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நவ., 25ல் ஞாயிறு அன்று, சென்னை திருநின்றவூர், ஜெயா கால்லூரியில், மதியம் 3.00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த முயற்சிக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ், கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், வையாபுரி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.