Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : மறக்க முடியாத நடிகர் அசோகன்

15 நவ, 2018 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Evergreen-actor-Ashokan

குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றவர் அசோகன். அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் பூதமாக நடித்தது இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் படம் என்றால் வில்லனாகவோ அல்லது குணச்சித்ர நடிகராக அசோகன் இருப்பார். எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு அழைத்தும் வராத ஒரே நடிகர் அசோகன். அவர் 5 படங்களில் ஹீரோவாக நடித்திருப்பது இன்றைய இளைய சமூகத்துக்கு அவ்வளவாகத் தெரியாது.

1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.சங்கர் இயக்கினார். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்து 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி.


1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த “காட்டு ராணி”. இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். எம்.ஏ.திருமுகம் இயக்கினார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன் ஜோடியாக வசந்தா நடித்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” தான் அசோகன் ஹீரோவாக நடித்த கடைசி படம். இதில் அவர் ஜோடியாக மணிமாலா நடித்திருந்தார். இந்தப்படம் வெற்றி பெற்ற படம். ஆனாலும் என்னவோ தெரியவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு அசோகன், வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் தான் நடித்தார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டர் நெருக்கடிக்கு இடையில் வெளிவரும் ஹாலிவுட் படம்தியேட்டர் நெருக்கடிக்கு இடையில் ... அர்ஜூன் மீது பாலியல் புகார் : நடிகை ஸ்ருதி ஹரிகரன் மகளிர் ஆணையத்தில் வாக்குமூலம் அர்ஜூன் மீது பாலியல் புகார் : நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சுந்தரம் - Kuwait,குவைத்
17 நவ, 2018 - 12:38 Report Abuse
சுந்தரம் இவரது மனைவி ஒரு பிராமணப்பெண். இவரோ கிறித்தவர். ஆனாலும் இருபுறமும் பேசி இந்த திருமணத்தை நடத்தி வைத்ததுடன் நில்லாமல் பெருமளவு பொருள் உதவி செய்தவர் எம் ஜி ஆர் அவர்கள்.
Rate this:
BP Thiagarajan - New Delhi,இந்தியா
16 நவ, 2018 - 15:34 Report Abuse
BP Thiagarajan அசோகன் சினிமா வாழ்க்கையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். ஆரம்பம் முதல் 1970 வரை, 1970 முதல் 1978 நேற்று இன்று நாளை சினிமா வரை, கடைசி வரை. முதல் பாகத்தில் ஹீரோ, வில்லன் குணச்சித்திரம் என பல விதம் - தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ் எ த்ருலோகச்சந்தர் பிலிம்ஸ், டி ஆர் ராமண்ணா பிலிம்ஸ் . பொதுவாக வில்லன் எம் ஜி ஆர் கூட . மூணாவதான பக்கத்தில் காமெடி சப்போர்ட் ரோல் - பாலூட்டி வளர்த்த கிளி, தேவர் பிலிம்ஸ் ஜெய் ஷங்கர் படங்கள். உயர்ந்த மனிதனுக்கு பின் சிவாஜி கூட படமில்லை. நேற்று இந்தூர் நாளை படத்துக்கு அப்புறம் எம்ஜிஆர் கூட படமில்லை. கடை பக்கத்தில சுமார் தூள் கிளப்புவாரு. ஆனா ரொமப் ஸ்டாக் ஆக்ட்டிங் பண்ணுவாரு இந்த அந்துவான் . அடிமைப்பெண், நான், பாட காணிக்கை எனக்கு புடிச்ச படங்கள் - thiagarajan
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
16 நவ, 2018 - 04:11 Report Abuse
Bhaskaran இது சத்தியம் பிரபல எழுத்தாளர் ரா. கி ரங்கராஜன் எழுதி குமுதத்தில் தொடர்கதையாக வந்த நாவல் அசோகன் நன்ராக நடித்திருப்பார் அனைத்துப் பாடல்களும் அருமையானப் பாடல்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in