தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்சேதுபதி நடித்து வெற்றிபெற்ற 96 மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் 'சீதக்காதி' ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்துள்ளவர் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா.. மலையாளத்தில் துல்கர், பஹத் பாசில் படங்களுக்கு இசையமைத்துள்ள இவரை, தனது ஒரு பக்க கதை மூலம் தமிழுக்கு அழைத்துவந்தார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்..
அந்த சமயத்தில் பாலாஜி தரணீதரனின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமாருடன் கோவிந்த் வஸந்தா நட்பாகி, அவர் இயக்கிய 96 படத்திற்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து, தற்போது மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கோவிந்த் வஸந்தாவை தேடிவந்துள்ளது.