Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேனர்களே இல்லாத 'சர்கார்' தியேட்டர்கள்

10 நவ, 2018 - 14:57 IST
எழுத்தின் அளவு:
Sarkar-movie-without-banner

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுவிடும். தற்போதைய டிஜிட்டல் பேனர் யுகத்தில் தியேட்டர்களில் மட்டும் பேனர்களை வைக்காமல், தியேட்டர் உள்ள தெரு முழுவதும் பேனர்கள் வைத்த காட்சியை 'சர்கார்' படத்தில் பார்க்க முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஊர்களில் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்திருந்தார்கள்.

கேரளா ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கொல்லத்தில் 175 அடி உயர கட்-அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், அடுத்த நாளிலேயே தமிழ்நாட்டில் 'சர்கார்' வெளியான பல தியேட்டர்களில் அந்த பேனர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டது. தெருவெங்கும் வைக்கப்பட்ட மற்ற பேனர்களை காவல் துறை உதவியுடன் ரசிகர்களே நீக்கினார்கள். அனுமதியின்றி பேனர்களை வைத்த குற்றத்திற்காக சில விஜய் ரசிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவினரால் கிழிக்கப்பட்ட 'சர்கார்' பேனர்களுக்குப் பதிலாக தயாரிப்பு நிறுவனமும், விஜய் ரசிகர்களும் வேறு எந்த பேனரையும் இதுவரை வைக்கவில்லை. 'சர்கார்' வெளியாகியுள்ள பல தியேட்டர்களில் பேனர்கள் இல்லாமல், என்ன படம் ஓடுகிறது என்று கூட தெரியாமல் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவுவிஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு ஜெயலலிதா படத்திற்காக காத்திருக்கும் நித்யா மேனன் ஜெயலலிதா படத்திற்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 நவ, 2018 - 18:51 Report Abuse
Vasudevan Srinivasan சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த விஜயின் 'காவலன்' படம் வெளிவந்த அறிவிப்பே இல்லாமல் வந்தது..
Rate this:
10 நவ, 2018 - 19:30 Report Abuse
பாரதன். இலவசம் வேண்டாம் என்றால், எல்லாம் தானே வரணும். இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளும் வர வேண்டும்தானே? தயாரிப்பாளர் சன் டிவி கலாநிதி மாறன் திமுக-காரர் என்பதால் கலைஞர் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தீயிட்டுக் கொளுத்துவது போல் காட்டாமல் நடிகர் விஜயை தேவையின்றி சிக்கவைத்து விட்டதைக்கூட அறியாத, விஜய் ரசிகர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
Rate this:
vijay - ,
10 நவ, 2018 - 17:16 Report Abuse
vijay engaluku banner theva illa . neenga payapadreengale adhe podhum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in