Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் - திரையில் ஒன்று, நிஜத்தில் வேறொன்று

09 நவ, 2018 - 16:30 IST
எழுத்தின் அளவு:
Sarkar---Real-and-Reel

விஜய் நடித்து கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான 'சர்கார்' படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதால் தமிழக அமைச்சர்கள் படத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.

'சர்கார்' படத்தில் விஜய்யின் ஹீரோயிசமான காட்சிகள் பல இருக்கின்றன. பாடல்களிலும் அப்படிப்பட்ட வரிகள் உள்ளன. திரையில் மட்டும் ஹீரோசியத்தைக் காட்டிய விஜய், நிஜத்தில் நேற்றிலிருந்து 'சர்கார்' பட பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. படத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர்கள் தான் கருத்து தெரிவித்தனர்.

'சர்கார்' படத்தில் 'ஒரு விரல் புரட்சி' என்று பாடிய விஜய், ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. 'வேர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து' எனப் பாடிவிட்டு படக்குழு அலறிப் போய்க் கிடக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்கார் ஆடியோ விழாவில், விஜய் சொன்னபடியே, இந்த விவகாரத்திலும் அவர் உம்முன்னு, கம்முன்னு இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
2.0 பார்த்து ஆச்சரியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்2.0 பார்த்து ஆச்சரியப்படும் ... 'என்ஜிகே' ரிலீஸ் எப்போது.? 'என்ஜிகே' ரிலீஸ் எப்போது.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

தாமரை - பழநி,இந்தியா
13 நவ, 2018 - 09:19 Report Abuse
தாமரை படத்துல ஒண்ணுமில்லை.போட்டுக்கிச்சு.ஏதாவது பரபரபரப்பு செய்து ஓட்ட முயலுகிறார்கள்.அப்படியும் ஓடும் வழியைக் காணோம்.தயாரிப்பு சன் நிறுவனம் அதனால் ஏதாவது விளம்பரம் ஓசியில் வரும்படி பார்த்துக்கோவார்கள்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12 நவ, 2018 - 16:50 Report Abuse
Endrum Indian விஜய் ரசிகன் வெறியன் என்று சொல்லிக்கொள்பவனே ஒரு நிமிடம் யோசி சினிமா ஒரு மாயை. சர்க்கார் படத்தை ஒரு நிமிடம் நன்றாகப்பார்க்கும் போது யோசி இப்படி நடக்க முடியுமா என்று அப்பொழுது புரியும் விஜய்யாவாது ஒரு மண்ணாவது என்று அதில் வந்த காட்சிகள் எதுவும் நிஜமில்லை. ஒரு வோட்டு கள்ளவோட்டு- கோர்ட்டு-தேர்தல் கான்செல்-மறுதேர்தல் 10 நாளில், ஒருவன் 50 பேரை வெறும் கையால் அடித்து துவைப்பானாம். காதிலே பிரகதீஸ்வரர் கோவில் நந்தி அளவுக்கு வளையம் தொங்க விட்டாங்கப்பா இந்த சர்காரிலே (அந்த படத்தை நான் பார்த்து விட்டேன்) தாங்க முடியவில்லை. மாயை என்பது வேறு மாயை தான் நிஜம் என்று சொல்கின்றது சர்க்கார். அறிவை தியேட்டர் வெளியே கழட்டி வைத்து விட்டு அந்த படத்தை பார்க்க்க தியேட்டர் உள்ளே செல்லவும், இல்லையென்றால் சே தூ தூ என்று துப்ப வரும் ஒவொரு காட்சியும் மிகை படுத்தப்பட்ட என்றால் சுத்தமாக ௧௦௦/௧௦௦௦/100000 மடங்கு மிகைப்படுத்தப்பட்ட படம் இது.
Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
12 நவ, 2018 - 12:28 Report Abuse
ganapati sb படம் வரும் முன் தாக்குவது ஜெயலலிதா ஸ்டைல் படம் வந்த பின் தூக்குவது எடப்பாடி ஸ்டைல் இரண்டாவதில் தொண்டருக்கு போராட்ட உற்சாகம் எதிர்தரப்புக்கு சேதாரம் அதிகம் தினகரன் ஸ்டாலின் ஓசி சோறு போராளிகள் என பலரை அசால்டாக ஓரங்கட்டி ஆட்சி செய்யும் எடபடியார் உடன் ஜோசப் விஜய் போன்ற buildup பார்ட்டிமோதினால் basement காணாமல் போகும்
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
12 நவ, 2018 - 11:20 Report Abuse
Thalaivar Rasigan ரசிகர்கள் கிட்டே இருந்தே பயந்து ஓடுவான்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 நவ, 2018 - 04:00 Report Abuse
meenakshisundaram இன்னுமா விஜய்க்கு அரசியல் ஆசை? கமல் போன்ற நடிகர்கள் (ரஜினியும் கூட) formal எடுகேஷன் அதிகம் இல்லை என்றாலும் தனியே நிறைய படித்து நன்கு அறிவு பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த விஜய்யோ விருக்கம் பாக்கம் ஸ்கூல் ஒட சரி. ஒரு வித மான 'டான்ஸ்' ஆடியே சம்பாதித்து விட்டார். ஆண்களில் ,கமல் ,Ajith.போன்ற நடன ஸ்டைல் இவருக்கு எந்த விதத்திலும் வராது.
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in