Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக சர்காரிடம் பணிந்தது சர்கார் : சர்ச்சை காட்சிகள் நீக்கம், பிரச்னை தீர்ந்தது

09 நவ, 2018 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Sarkar-problem-solved-:-Controversy-scene-removed-by-censor

தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக சர்கார் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் தணிக்கை உதவியோடு நீக்கப்பட்டன. மறுதணிக்கை செய்யப்பட்ட படம் மதியம் முதல் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகிறது.

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளிக்கு வெளிவந்த படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.திடீர் எதிர்ப்புபடம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடி வந்த நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுக.,வினர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஊர்களில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. சில தியேட்டர்களில் கண்ணாடி கூட சேதமடைந்ததாக கூறப்படுகிறது.பணிந்த சர்கார்இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக நேற்று படக்குழு அறிவித்தது. இதுதொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், சர்காரில் யாரும் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருந்தால் அதை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தணிக்கையில் அந்தக்காட்சிகள் இன்று நீக்கப்படும் என்றார்.சர்ச்சை காட்சிகள் நீக்கம்அதன்படி சென்னையில் தணிக்கை துறை அலுவலகத்தில் சர்கார் படம் இன்று மறு தணிக்கைக்கு சென்றது. அதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. குறிப்பாக, படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் பெயரான கோமளவள்ளி என அழைக்கப்படும் இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அதேப்போன்று இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட சர்கார் படம், இன்று மதியம் முதல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

பிரச்னை தீர்ந்ததுமுன்னதாக இந்தக்காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்ட படக்குழுவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார். சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கியதால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இனி இந்தப்படத்திற்கு எந்த பிரச்னைகளும் எழாது என தெரிகிறது.


சர்கார் சர்ச்சைகள் நீக்கம் என்னென்ன.?

01. சர்கார் படத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் போட்டு கொளுத்தும் காட்சி (ரீல் எண் 7) நீக்கப்பட்டுள்ளது.

02. வரலட்சுமியின் கேரக்டர் பெயரான கோமளவல்லி என்கிற வார்த்தை எங்கெல்லாம் வருகிறதோ, அந்தக்காட்சிகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. (ரீல் எண் 7 மற்றும் 8)

03. "பொதுப்பணித்துறை" (ரீல் எண் 4) என்ற வார்த்தையும், "56 வருஷம்" (ரீல் எண் 7) என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளன.Advertisement
கருத்துகள் (49) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகாவின் ஹலோ வேற லெவல் : சிம்புஜோதிகாவின் ஹலோ வேற லெவல் : சிம்பு என் நடிப்பைப் பார்த்து சிரித்தேன் : நிவேதா பெத்துராஜ் என் நடிப்பைப் பார்த்து சிரித்தேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (49)

10 நவ, 2018 - 14:00 Report Abuse
simtaangaran நான் அப்பவே சொன்னேன் படம் flop ஆயிடும். என்று.
Rate this:
lingan - chennai,இந்தியா
10 நவ, 2018 - 10:37 Report Abuse
lingan கோமள வள்ளி இருக்கும் போது சொல்லியிருந்தா கோமணம் கிழிஞ்சிருக்கும் . வேஷ்டி கட்டினவர்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிட்டு அந்த கமல நாயகன் பட்ட அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல . இதுல தைரியமா சொல்லிட்டு தப்பிச்சவர் சாமியார் மட்டுமே
Rate this:
lingan - chennai,இந்தியா
10 நவ, 2018 - 10:14 Report Abuse
lingan There is a huge in the 3rd day collection.Sarkar is going to be an average or flop .
Rate this:
kesavan - COIMBATORE,இந்தியா
10 நவ, 2018 - 09:07 Report Abuse
kesavan கலர் டீ.வி ஓ.சி யா கொடுத்த அதுல பிசினஸ் பண்ணுன சன் டிவி குடும்பம் தயாரிக்க இந்த படத்துல இப்படி ஒரு மெசேஜ்(இலவசத்த பத்தி) . வாழ்க ஜனநாயகம் . நாடு ஊருபடட்டும்.வாழ்க விஜய் ரசிக அடிமைகள்.
Rate this:
Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 நவ, 2018 - 08:19 Report Abuse
Mahmood Jainulabdeen இப்போது வரும் படங்களெல்லாம் ஒரு வாரம் தான் வசூல் already வசூல் பார்த்துவிட்டார்கள்.
Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in