தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற தும்ஹாரி சுலு படம், தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீ-மேக்காகி உள்ளது. ஜோதிகா, வித்யாபாலன் வேடத்தில் ரேடியா ஜாக்கியாக நடித்திருக்கிறார். ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். இவர்களுடன் லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், சாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராதா மோகன் இயக்க, தனஞ்செயன் தயாரித்துள்ளார்.
குறும்புத்தனமான குடும்ப பெண்ணான ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, பிரச்னைகள் எல்லாவற்றையும் உணர்வுப்பூர்வாக படமாக்கி உள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கார்த்தி வெளியிட்டார்.
இந்தப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் காட்சிகள் டிரைலரின் கடைசியில் இடம் பெற்றுள்ளது. அதில் சிம்பு, ஜோதிகாவிடம், "உலகில் அதிகமான மக்கள் உபயோகிக்கும் வார்த்தை என்ன தெரியுமா ஹலோ. ஆனால் நீங்கள் சொல்லும் ஹலோ வார்த்தை வேற லெவல்" என்கிறார்.
தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வருகிற 16-ம் தேதி வெளியாகிறது.