தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், ஹீரோவாக நடிக்கும் படம் தாதா 87. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடிக்கிறார். இவர்கள் தவிர ஜனகராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய்ஸ்ரீ என்ற புதுமுகம் இயக்குகிறார். லியாண்டர் லீ மார்ட்டின் இசை அமைக்கிறார்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று சமீபத்தில் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டது. "ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு..." என்று தொடங்குகிறது அந்தப் பாடல், ரஜினிகாந்த் ஒரு பேட்டியின்போது "நிருபர் என்னிடம் உங்கள் கட்சி கொள்கை என்ன என்று கேட்டார், ஒரு நிமிஷம் எனக்கு தலை சுத்திருச்சு" என்று கூறியிருந்தார். இந்த பேச்சு அப்போது வைரலாக பரவியது.
ரஜினியின் இந்த வாய்சை கொண்டே பாடல் வெளிவந்திருப்பது வைரலாக பரவி வருகிறது. முழுக்க முழுக்க நடன கலைஞர்கள் ஆடிப்பாடுவதாக இதன் வீடியோ உள்ளது. பாடலின் இறுதியில் ரஜினி சிரிப்பது மாதிரியாக முடிகிறது.