ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
100 கோடி முதல் 600 கோடி வரை படங்கள் தயாரிக்கப்படும் நேரத்தில் 50 லட்சத்திலும் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் அமுதா. சதன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் சார்பில் சபீக் தயாரித்துள்ள படம். இதில் ஸ்ரேயாஸ்ரீ, அனீஸ்ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா, கதிர் மற்றும் அசஸி ஜிப்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஷ் பனங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார், அருண் கோபன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் பி.எஸ்.அர்ஜுன் கூறியதாவது:
சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான இந்த திரில்லர் படத்தை குறைந்த பட்ஜெட்டில், அதுவும் 50 லட்சம் ரூபாய்க்குள் தயாரித்துள்ளோம். ஒரு கொலை, அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள், யார் கொலையாளி, எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் படம் உருவாக்கியுள்ளது. நிச்சயமாக இது பேய்ப் படம் இல்லை. அதே நேரத்தில் ஒரு பேய்ப் படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ, அதைவிட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம். என்றார்.