Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல்

08 நவ, 2018 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Sarkar-controversy-scene-will-remove-tomorrow

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய்யின் படம் சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்தவகையில் தற்போது தீபவாளிக்கு வெளியாகி இருக்கும் சர்கார் படமும் சிக்கி உள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை தீயிட்டு கொளுத்துவது மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை, வரலட்சுமிக்கு சூட்டி அவரை நெகட்டிவ்வாக சித்தரித்து இருப்பது போன்ற சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக.,வினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பிற்பகலில் இருந்து தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதுடன், அங்குள்ள பேனர்களை கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருப்பதாவது : தியேட்டர் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து படத்தை வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியிடமும், படத்தை தயாரித்த நிறுவனத்திடமும் பேசினோம். அவர்கள் சம்மதம் சொல்லியிருக்கிறார்கள். எந்தெந்த காட்சிகள் நீக்கப்படுவது என இன்று இரவு பேசி முடிவெடுக்க உள்ளோம்.

நாளை(நவ., 9) காலை தணிக்கை குழுவின் ஒப்புதலோடு சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும். மதியத்திற்கு பிறகு அந்தக்காட்சிகள் எந்த தியேட்டரிலும் இருக்காது. அதுவரை அதிமுக., வினர் அமைதி காக்க வேண்டுகிறோம். தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
பூர்ணாவை துரத்தும் போலீஸ்பூர்ணாவை துரத்தும் போலீஸ் துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்காருக்கு கமல் ஆதரவு துணிவில்லாத அரசு தடம் புரளும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

sumutha - chennai - Chennai,இந்தியா
09 நவ, 2018 - 13:54 Report Abuse
sumutha - chennai இப்போது டிவிக்களில் விவாதத்தில் செய்திகளில் சர்க்கார் படத்தை பற்றி எதோ நாட்டுக்கு மிக முக்கியமான விஷயம் போல் தலைப்பு செய்திகளில் தீயாய் அலசிக் கொண்டிருக்கிறர்ர்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் படத்தயாரிப்பு நிறுவனம் இந்த பூனையும் பால் குடிக்குமா என மிக அமைதியாய் ஏதும் நடவாததுபோல் அவர்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைத்து படம் எடுத்தார்களோ, அது நடந்து கொண்டிருக்கிறது என நினைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். வடிவேலு நிலைமை இயக்குனருக்கும், நடிகருக்கும் வராமல் இருக்கட்டும். அதிமுக காரர்களின் கோபம் சரியா என கேட்பவர்களிடம் ஒரு கேள்வி. இது கற்பனைக்கதை என்று முதலில் சொல்கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த படத்தில் வரும் முதல்வராக இருப்பவர் மிக கெட்டவராக காட்டி இருப்பார்கள் அதில் கேள்வியில்லை. அவர் வழங்கும் இலவசங்கள் நாட்டுக்கு தேவை இல்லை என சொல்கிறார்கள். அதிலும் கேள்வி இல்லை. (இவை தேவையா இல்லையா என பொருளாதார சமுகநலனில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்களா என தெரிய வில்லை? டிவி விவாதங்களில் வருபவர்கள் இவை கட்டாயம் தேவை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.) அதே சமயம் அந்த இலவசப்பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சியை நன்கு கவனியுங்கள். அந்த இலவச பொருள்களில் இருக்கும் படம் அந்த திரைப்படத்தில் இருக்கும் முதல்வர் கதா பாத்திரம் ஏற்றவரின் படமா அல்லது ஜெயலலிதா அவர்களின் படமா? இதனால் பிரச்சினை வரும், வரட்டும் பார்த்துக் கொள்வோம் என தெரிந்தே இதை படமாக்கியிருக்கிறார்கள். அதனால் வரும் எதிர்ப்புகளை அவர்கள் எதிர்கொண்டு ஆக வேண்டும். வெறுமனே இது சினிமா என கடந்து போக முடியுமா? நேர்மையுடன் சொல்லுங்கள் பார்ப்போம்.
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
09 நவ, 2018 - 09:33 Report Abuse
Bala Murugan விஜய் அண்ணா நீங்கள் எப்பொழுது தேசிய விருது வாங்குவீர்கள் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் தம்பி பாலமுருகன்.
Rate this:
hanumanth - kulithalai,இந்தியா
09 நவ, 2018 - 09:11 Report Abuse
hanumanth ஒரு படத்தை எப்படியாவது ஓட வைக்க வேணும் என்பதட்காக இப்படி ஒரு படத்தை பெரிய நிறுவனம் வேண்டும் என்று நல்ல தலைவியின் பெயரையும் வைத்து அவர் கொண்டுவந்த இலவச திட்டங்களின் மூலம் எத்தனையோ கஷ்டப்பட்ட பிள்ளைகள் மடிகணனி மூலம் கல்வி கற்று சாதனைகள் படிக்கிறார்கள்.முதலைமருக்கும் பெரிய தளிவருக்கும் இதெல்லாம் எருமை மாட்டின் மேலே மலை பெய்தது போலத்தான்,இந்த ஏழைகளை பண்ணத்தி கொடுத்து தரமான படத்தை பார்த்தால் நல்ல சிந்தனை வரும் சும்மா இப்படியான அரசியல் நையாண்டி படத்தை பார்த்து தங்கள் பநதிதான் காரியாகினது மிச்சம்.நடிகருக்கும் டிரெக்ட்டருக்கும் எப்போதும் பொதுவாக தோழி நோக்கு சிந்தனை இருக்க வேணும்.இதெல்லாம் அம்மா இல்லை என்றவுடன் அரசியல்வாதியாக நடித்தவர் நல்ல பேட்சலியாக இருக்கலாம் அனால் நன்றி மறந்த ஒரு வர.நீங்கள் பணத்துக்காக என்னவும் செய்யலாம் அனால் கடவுளின் நீர்போல் இருந்து எவரும் தப்ப முடியாது.ஏழைகளின் பசி பிணி தீர்த்த அன்னபூரணி இப்போது இல்லை என்றாலும் அவரின் ஆன்ம தீயோரை மன்னிக்காது.
Rate this:
Lokesh - Chennai,இந்தியா
09 நவ, 2018 - 08:49 Report Abuse
Lokesh விஜய் அரசியல் லாபத்துக்கு அப்பாவி மக்கள் பலி ஆடு . விஜய் நெஸ்ட் பிலிம் ஷூட்டிங் போய்டுவாரு இவனுங்க அடிவாங்கி சாவானுங்க
Rate this:
விக்கு மண்டையன் அப்படியே படத்தையும் நீக்கமுடியுமா?
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in