Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜூனுக்கு எதிரான மீ டூ புகார் : விளக்கமளித்த ஸ்ருதி ஹரிஹரன்

08 நவ, 2018 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Sruthi-hariharan-records-her-statement-against-Actor-Arjun-in-MeToo-issue

நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் சொன்ன மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர் சங்கம் எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை.

அதையடுத்து ஸ்ருதி மீது ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக சொன்னார் அர்ஜூன். ஆனபோதும் ஸ்ருதிஹரிஹரன் பணியவில்லை. தனது சார்பில் அர்ஜூன் மீது வழக்குத் தொடர்ந்தார்.


இந்த நிலையில், அர்ஜூன் கைது செய்யப்படுவார் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் அவரை நவம்பர் 14-ந்தேதி வரை கைது செய்ய பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து பெங்களூர் காவல் நிலையத்துக்கு சென்று, நிபுணன் படப்பிடிப்பில் இருந்தபோது ஸ்ருதி ஹரிஹரனிடம் தான் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று விளக்கமளித்தார் அர்ஜூன்.


அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி ஹரிஹரனும் காவல் நிலையம் சென்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை போலீஸ் முன்பு கூறிய ஸ்ருதி, அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கிளம்பிய சர்கார் சர்ச்சை : படத்திற்கு பிளஸ்ஸா.?கிளம்பிய சர்கார் சர்ச்சை : ... பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய்யின் சர்கார்! பொதுமக்களிடம் விழிப்புணர்வை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

murugu - paris,பிரான்ஸ்
10 நவ, 2018 - 13:50 Report Abuse
murugu ஆக்சன் கிங் அர்ஜூனாச்சே ,சும்மாவா ஆக்சனை அதிகமாக காட்டிவிட்டார் போலிருக்கிறது
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
10 நவ, 2018 - 04:35 Report Abuse
C.Jeyabalan ஒழுக்கத்திற்கும் சினிமா உலகுக்கும் காதவழி தொலைவு போல தோணுது
Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
09 நவ, 2018 - 20:03 Report Abuse
ராஜேஷ் பெரும்பாலும் நான் சினிமாவே பார்ப்பது இல்லை . ஆனால் சமுதாய நல்லிணக்கம் தேசபக்தி திரைபடங்ளை ஒரு காலகட்டத்தில் ஆர்வமுடன் பார்த்தேன். அதில் அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் , செங்கோட்டை ,முதல்வன் போன்ற படங்கள் குறிப்பித்தக்கது கடந்த சிலவருங்களாக அவர் எடுக்கும் படங்கள் தேசபக்தி தீவிரவாதம் போன்றவற்றை முன்னிறுத்தி காட்டுவர் . எனக்கு என்னமோ இந்த சுருதி தீவிரவாதியோட ஆலா இருப்பாளோணு தோணுது இல்லை ,நக்சல் அதர்வாளரா. இன்னும் விஜயகாந்த ரணம போன்ற படங்களையும் , அந்நியன் கதாநாயகர்களையும் குறிவைக்க திட்டமா இருக்குமோ ?
Rate this:
chander - qatar,கத்தார்
09 நவ, 2018 - 09:01 Report Abuse
chander நடிக்க வந்தால் கட்டி பிடிப்பாங்க என்று நடிகையிடம் சொல்லவில்லையா
Rate this:
skv - Bangalore,இந்தியா
09 நவ, 2018 - 06:24 Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்த கண்ராவிகளிலிருந்து தப்பனும்னா நடிக்காத நேரங்களில் எவனும் நடிகைகளை திரும்பியே பாக்காதீங்க மீ 2 என்று உத்தமிகள்போல கிளம்பிருக்காளுக ஏவாளும் சுத்தம் இல்லீங்க (பொது ஆண்/ பெண்) பாதிப்பு இப்போதும் ஆணுக்கு இல்லீங்களே பெண்களுக்குத்தான் கர்பம் என்று வர்றது , எந்த ஆணும் பாதிப்பே இல்லே என்பதால் தான் கஸ்மாலங்கள் ஆட்டம் போடுறாங்க வித் ஆயிட்டால் எவ்ளோ ஸ்டெபினி யம் வச்சுண்டு திரியாளான்னு கர்வம் வேறு )
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in