பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக ஒரு பக்கம் காட்சியளித்தாலும் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலராகவும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் சல்மான் கான். சமீபத்தில் மும்பை டாடா மருத்துவமனையில் கேன்சருக்காக சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஒருவன், சல்மான் கானை பார்க்க விரும்பியுள்ளான். அந்த தகவலும் சில நலம் விரும்பிகளால் சல்மானின் காதுகளுக்கு சென்றது.
தற்போது 'பாரத்' என்கிற படத்தில் பிசியாக நடித்து வரும் சல்மான் கான், அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுவனிடம் பேசி அவனை குஷிப்படுத்தியுள்ளார். அவனை மட்டுமல்ல, அந்த வார்டில் இருந்த, கேன்சர் பாதிப்புக்கு ஆளான மற்ற குழந்தைகள் அனைவரையும் பார்த்து, அவர்களையும் சந்தோஷப்படுத்தி விட்டுத்தான் சென்றாராம் சல்மான் கான்.