இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு அரசியல் நிகழ்வுகளை தோலுரித்து காட்டும் விதத்தில் இந்தப்படம் அமைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் வரலட்சுமி, அரசியல்வாதியின் மகளாக, வில்லி கதாபாத்திரத்தில் கோமலவள்ளி என்ற பெயரில் நடித்திருக்கிறார். பெற்ற தந்தைக்கே விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு வரலட்சுமியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
கோமலவள்ளி பெயர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற் பெயராகும். இதனால் சர்காருக்கு புது விதமான சர்ச்சை கிளம்பி உள்ளது.