Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4 நாள் வசூலை இழந்த '96'

05 நவ, 2018 - 12:09 IST
எழுத்தின் அளவு:
96-movie-lost-4-day-collection

தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் டிவிக்களில் ஒளிபரப்பு செய்யப்படுவது கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. பெரிய அளவில் வசூலைக் குவிக்காத படங்களைத்தான் அப்படி ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அனைவராலும் பாராட்டப்பட்டு, ரசிக்கப்பட்டு, வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கும் '96' படத்தை தீபாவளியை முன்னிட்டு நாளை டிவியில் ஒளிபரப்பு செய்வதாக சில நாட்களுக்கு முன்பே அறிவித்தார்கள்.

அதனால், அந்தப் படத்தின் வசூல் கடந்த நான்கு நாட்களாக மிகவும் குறைந்துவிட்டது. போன வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட '96' படம் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. ஆனால், '96' படம் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியான பின் நேற்று ஞாயிற்றுக் கிழமையும், அதற்கு முன் தினம் சனிக்கிழமையும் இந்தப் படத்திற்கான முன்பதிவு அப்படியே குறைந்துவிட்டது.

டிவியில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை இன்று திங்கள்கிழமை வெளியிட்டிருந்தால் அந்த வசூலாவது சில லட்சங்கள் படத்திற்குக் கிடைத்திருக்கும். அதுவும் தற்போது கிடைக்காமல் போய்விட்டது. டிவியில் நாளைய ஒளிபரப்பு இல்லாமல் இருந்தால் தீபாவளி தினத்தன்றைய வசூலும் படத்திற்கு மேலும் கிடைத்திருக்கும் என்று தியேட்டர் வட்டாரங்களில் வருத்தப்படுகிறார்கள்.

டிவியில் படத்தை ஒளிபரப்பக் கூடாது என படத்தின் நாயகி த்ரிஷாவின் டிவீட்டுக்குக் கூட பல்லாயிரம் பேர் 'லைக்' தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பர் 16ல் 'திமிரு புடிச்சவன்' வெளியிட பகீரத முயற்சிநவம்பர் 16ல் 'திமிரு புடிச்சவன்' ... பெண்களை அனுமதிக்காத கடவுள் வேண்டாம் : பிரகாஷ்ராஜ் பெண்களை அனுமதிக்காத கடவுள் வேண்டாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

madhavan rajan - trichy,இந்தியா
11 நவ, 2018 - 16:09 Report Abuse
madhavan rajan a bird in the hand is better than two in the bush.
Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
11 நவ, 2018 - 12:39 Report Abuse
Ramakrishnan Natesan இந்த படம் வருவதற்கு முன்னரே ஓடுமா ஓடாதா என்று தெரியும் முன்னர் படம் விற்க படுகிறது இந்த படம் வெளியே வரவே அந்த பணமும் காரணம் இல்லை என்றால் படமே வந்திருக்காது இது சினிமா பணம் போட்டவன் எடுக்கணும் அவ்வளவுதான் ஒரு வேலை படம் பரபரப்பா என்று ஊத்திக்கொண்டு இருந்தால் என்ன செய்வார் இந்த விஷயத்தில் படத்தை விற்றவர் போட்ட அக்ரீயெமென்ட் தான் வில்லங்கமான அக்ரெமீன்ட் அவருக்கு அன்றய நெருக்கடி என்ன செய்ய எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி தான்
Rate this:
rsudarsan lic - mumbai,இந்தியா
09 நவ, 2018 - 16:16 Report Abuse
rsudarsan lic அந்த படத்தின் ஆரம்பம் முடிவு வசனம் எதுவும் புரியவில்லை அதற்காக டிவி யில் பார்த்து மீண்டும் திரை அரங்குகளில் paarkkalaam. முடிவும் theriyavillai. ஓ எந்த படம் என்று கேட்கிறீர்களா?
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
07 நவ, 2018 - 15:03 Report Abuse
BoochiMarunthu லாஜிக் இடிக்கிறது .டிவியில் வந்தால் சன் டிவி தயாரித்த சர்க்கார் படம் பார்க்கா யாரும் theatre போகமாட்டார்கள் . அப்போ கண்டிப்பா அடி வாங்கும் . விஜய் டிவி யால் பாதிக்கப்பட்ட சன் டிவி TRP காக இப்படி வெளியிடுகிறது .
Rate this:
Jayvee - chennai,இந்தியா
07 நவ, 2018 - 11:09 Report Abuse
Jayvee மிக அருமையான படம்.. நடிகர் முரளி எப்படி மனஉளைச்சலால் இறந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்.. மாறன் சகோதரர்கள் தங்களது பண பலத்தால் ஒரு நல்லபடத்தை எப்படி தேடர்களிலிருந்து ஒழித்தார்கள் எனபதற்கு இது ஒரு உதாரணம். சர்க்கார் படத்தை ஓட வைக்க இப்படி ஒரு கேவலமான முறை தேவைதானா ?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in