என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. இப்படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் 'கன்னிராசி' படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.
எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள் என்பதே கதை.
இப்படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. கலை இயக்குநர் பாலசந்தர் அந்த வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.