Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் பிரச்னையால் பல அசெளகரியங்கள் : பாக்யராஜ் ராஜினாமா

02 நவ, 2018 - 13:21 IST
எழுத்தின் அளவு:
K-Bhagyaraj-quits-from-writers-association-president

இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தொடர்பான கதை திருட்டு பிரச்னையில் ஒரு தலைவராக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.

செங்கோல் பட கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு அங்கீகாரம் பெற்று தந்தார். இது பாக்யராஜ்க்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும், சர்கார் படத்தின் முழுக்கதையையும் அவர் சொன்னது திரையுலகில் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பாக்யராஜ், திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது :

நல்லபடியாக சென்றது
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் பணிவான வணக்கம். போட்டி இல்லாமல், உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். நானும் மகிழ்ச்சியாக பொறுப்பு ஏற்று, மனசாட்சியோடு, நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாக சென்றது.

அசெளகரியங்களை சந்தித்தேன்
திடீர்னு சர்கார் படம் சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அவர் அளித்த புகாரில் உண்மை இருந்ததால் மற்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக நியாமாக அதை செயல்படுத்தவும் முடிந்தது. ஆனால் பல அசெளகரியங்களை சந்தித்தேன். தேர்தலில் நிற்காமல் நேரடியாக வெற்றி பெற்று வந்ததால் தான் இவ்வளவு பிரச்னைகள் என்று நினைக்கிறேன்.

சங்கத்தை காப்பாற்ற முடியாது
சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தின் பெயரையும், சங்க உறுப்பினர்களின் நலனையும் காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறேன். அதை உடனடியாக சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனாக என்னோட தலையாய கடமையாக கருதுகிறேன்.

முறைப்படி தேர்தல்

அதற்கு ஒரே வழி, நான் உட்பட என்னை மாதிரியே போட்டி இல்லாமல் பதவிக்கு வந்த எல்லோருமே ராஜினமா செய்துவிட்டு, முறையாக தேர்தல் நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வருது தான். ஆனால் மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கும் நிலையில் இப்போது தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நிறையபேர் சொல்கிறார்கள். ஆனால் சங்கமே வீணாக போவதை விட செலவு வீணாவது தவறில்லை. என்னுடைய இந்த அபிப்ராயத்தை ஏற்றுக் கொண்டு ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குது என்று பார்த்த பின்னர் தேர்தலை நடத்தினால் நான், மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு முறையாக தேர்தலில் நின்று, வெற்றிப்பெற்று பொறுப்பை ஏற்று, தொடர்ந்து கடமை உடன் செயல்படுவேன்.

மன்னிப்பு
எனக்கு நேர்ந்த அசெளகர்யங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்ன என்பதை சங்க நலன் கருதி வெளியிட விரும்பவில்லை

சர்கார் விவகாரத்தில் முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததால் வேறு வழியில்லாமல் சர்கார் பட கதையை வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கோருகிறேன்.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமி சரத்குமாரின் வருத்தம்வரலட்சுமி சரத்குமாரின் வருத்தம் இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தந்த சிவகுமார் இளைஞருக்கு புது செல்போன் வாங்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

balachandran - dammam,சவுதி அரேபியா
03 நவ, 2018 - 10:40 Report Abuse
balachandran பாக்கியராஜ் மீதும் தவறு உள்ளது ஒரே கதை இருவருக்கு தோன்றாத அதுவும் அவரு எழுதினது 7 வருடங்களுக்கு முன்பு, அவரு ஒன்னு சொந்தக்கதை எழுத வில்லை ஒரு பொதுவான பிரச்சனை தான் யோசிச்சி இருக்கார் அந்த கதை முன்னாடியே வெளி இட்டு இருந்தால் அதை யாரும் படம் எடுக்க போறது இல்லை நீங்களே தான் சொல்லுறீங்க அதை ஒரு சீல் போட்டு வச்சி இருந்தோம் இன்னு அப்படி இருக்க அது எப்படி திருட்டு அகா முடியும், இது இரண்டு பேருக்கும் தோன்றும் கதை தான்
Rate this:
King of kindness - muscat,ஓமன்
03 நவ, 2018 - 08:56 Report Abuse
King of kindness இந்த உலகத்தில் நல்லது செய்ய போனால் இப்படி தான்.முருகதாஸ் ஒன்றும் பத்தரை மாற்று தங்கம் அல்ல.ஏற்கனவே இவரின் கஜினி படம் christoper nolen படமான memento பட copy தான்.கத்தி படம் மீஞ்சூர் கோபியின் கதை தான்.மற்றும் இதர படங்கள் ஆங்கில கொரியா படங்களில் இருந்து சுட்டது தான்.ஆகையால் நீங்கள் இதற்காக வருந்த வேண்டாம்.மக்கள் மனம் உங்கள் பக்கம் தான்.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03 நவ, 2018 - 08:27 Report Abuse
Srinivasan Kannaiya நல்லது எல்லோருக்கும் பிடிக்காதே
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03 நவ, 2018 - 08:15 Report Abuse
ஆரூர் ரங் ரிடையர் ஆகும் வயதில் சன் பிக்ச்சர்ஸ் மாதிரியான ஊழலுக்கெதிரான நேர்மையாயின உத்தம நிறுவனத்தை எதிர்த்துக்கொண்டு வாழமுடியுமா? அவர்களது முன்புலம் பின்புலம் உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். சூதானமா இருங்க
Rate this:
Siva Nesan - salem,இந்தியா
03 நவ, 2018 - 07:35 Report Abuse
Siva Nesan திரு. பாக்கியராஜ் செய்தது மிகவும் சரி. அவர்க்கு என் பாராட்டுக்கள்.இதே போன்று சிந்தனை. கருத்துத் திருட்டும் நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதனால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நானும் ஒருவன். ஒரு கட்டுரையினால் கிடைக்கப்பெறும் புகழுக்காக புகழ் அடைந்தவர்கள் செய்யும் தில்லுமுல்லும் அதற்கு உடந்தைபோகும் ஊடகவியளார்களும் என்ன பலனை அடைந்தார்கள். புதியப் புதிய சிந்தனைக்கு முட்டுக்கட்டை போட்டதுதான் மிச்சம். ஆனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வளர்ச்சிக்கான அடித்தலம் கிட்டாமல் சிதைக்கப்படும் போது அடையும் வேதனையின் வலி என்னைப் போன்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு முயற்ச்சியிலும் இன்றுவரை சந்தேகத்தின்பேரிலேயே இயங்க வேண்டியுள்ளது. இப்பொழுது கழுவியூத்திய விஜெய் ரசிகர்கள் பாக்கியராஜ்க்கு என்ன பிராயசித்தம் செய்ய போகின்ரார்கள். அல்லது திரு.விஜெயாவது அல்லது அவரின் ரசிகர் மன்ற தலைவராவது வருத்தம் தெரிவிக்கலாமே பாக்கியராஜ் அவர்களுக்கு.
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in