ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன்பிறகு மதகஜராஜா உட்பட சில படங்களில் நடித்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, குறிப்பாக விக்ரம் வேதா படத்திற்கு பிறகு வரலட்சுமி நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும் கடைசியாக வெளியான சண்டக்கோழி 2, தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் சர்க்கார் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு மனக்குறை இருக்கிறதாம்.
அதாவது, எல்லா படங்களிலுமே இரண்டாவது கதாநாயகி அல்லது நெகட்டிவ் கேரக்டர், வில்லி கேரக்டர்களில் நடிக்க மட்டுமே தன்னை அழைக்கிறார்கள், தனிக் கதாநாயகி வாய்ப்பு குறைவாகவே வருகிறதாம். எனவே இனி வரும் படங்களில் தனக்கான கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான தனி ஹீரோயினாக நடிக்க முடிவெடுத்து உள்ளார்.