மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷன், அடுத்தப்படியாக நரகாசூரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இதையடுத்து கண்ணாடி என்ற படத்தில் நடிக்கிறார். திருடன் போலிஸ், உள்குத்து படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்குகிறார். ஹிந்தி நடிகை ஆன்யா சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் இரு மொழி படமாக உருவாகும் கண்ணாடி படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். சிறந்த ஒளி, ஒலியமைப்போடு ரொமாண்ட்டிக் த்ரில்லராக கண்ணாடி உருவாகி வருகிறது.