ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகைகளுக்கு திருமணமாகி விட்டாலே அவர்களின் சினிமா கேரியர் முடிந்து விட்டது என்று இருந்து வந்த காலம் மாறிவிட்டது. சமீபகாலமாக திருமணத்திற்கு பிறகும் நடிகைகள் சினிமாவில் பயணித்து வருகிறார்கள். நதியா உள்ளிட்ட சிலர் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ரீஎன்ட்ரி கொடுத்து சாதித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இப்போது லைலாவும் இணைந்திருக்கிறார். இவர், விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் தமிழுக்கு வந்தவர். அதையடுத்து முதல்வன், ரோஜாவனம், தீனா, தில், நந்தா, பிதாமகன், பரமசிவன் என பல படங்களில் நடித்தார்.
அதன்பிறகு 2006-ல் திருமணம் செய்து கொண்ட லைலா, தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி விட்டார். இந்த நேரத்தில் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். சில நட்பு வட்டார டைரக்டர்களிடம் நல்ல கேரக்டர்கள் இருந்தால் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு வரும் லைலாவிற்கு, எதிர்காலத்தில் நல்ல கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையும் மனதளவில் இருக்கிறதாம்.