டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 120 கோடி செலவில் தயாரிக்கப்பட்டடிருந்தாலும் மற்ற மீடியாக்களின் மூலம் விளம்பரப்படுத்தாமல் முழுக்க முழுக்க தங்களுடைய தொலைக்காட்சியின் மூலம் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளார்கள்.
பட வெளியீட்டுக்கு முன்பே தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் சுமார் 85 கோடிக்கும், உலக அளவிலான வியாபாரம் 120 கோடிக்கும் விற்கப்பட்டு 200 கோடிக்கும் மேலாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
வியாபாரத்தில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள 'சர்கார்' போலாந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட சுமார் 80 நாடுகளில், 1500 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்பாக வெளியான விஜய் படங்களை விட உலக நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் விஜய் படம் என்ற பெருமையை 'சர்கார்' பெறவுள்ளது.
'சர்கார்' படத்தின் வெளிநாட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏபி குரூப்ஸ் மற்றும் டி போக்கஸ் நிறுவனம் இணைந்து வாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 750 தியேட்டர்களில் வெளியாகிறது.