‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது இயக்கி உள்ள படம் ஹவுஸ் ஓனர். இதில் பசங்க கிஷோர் நாயகன், அவரது ஜோடியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆடுகளம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:
2018 தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே ஒரு மிகச்சிறந்த வருடம். 96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என நல்ல படங்கள் 2018ஐ அலங்கரித்திருக்கிறது. இந்த நல்ல நேரத்தில் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் என்னுடைய ஹவுஸ் ஓனர் படத்தை உங்களுக்கு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்டவை தான், ஹவுஸ் ஓனர் கூட விதிவிலக்கு அல்ல. அக்டோபர் எனக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே இருந்திருக்கிறது. இந்த சீசனில் வெளியாகி வரும் தரமான திரைப்படங்களின் லிஸ்டில் எங்கள் படமும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றார்.