அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
நடிகர் ஜெயராமின் மகன் அறிமுகமான ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமானவர்தான் மேகா ஆகாஷ். அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மேகா ஆகாஷ் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வரவில்லை.
இருப்பினும், ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் மேகா ஆகாஷ், அதர்வாவுடன் பூமராங், சிம்பு-சுந்தர்.சியின் தெலுங்கு ரீமேக் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சார்ட்டிலைட் சங்கர் என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகும் ஒரு படத்திலும் நடிக்கிறார் மேகா ஆகாஷ்.
ஆக, தெலுங்கில் மட்டுமே அவர் நடித்து இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் தமிழில் இன்னும் ஒருபடம்கூட வெளிவரவில்லை. இருப்பினும் தற்போது அரை டஜன் படங்களில் கமிட்டாகியிருப்பதாக சொல்லும் மேகா ஆகாஷ், அடுத்த ஆண்டில் நான் பிசியான நடிகையாகி விடுவேன் என்கிறார்.