ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹீரோக்கள் ரேன்ஞ்சுக்கு ஹீரோயின்கள் சோலோ ஹீரோயினாக அடிதடி ஆக்சனில் இறங்கி இருக்கும் நேரம் இது. நயன்தாரா ஏற்கெனவே இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து விட்டார். நயன்தாரா, ரங்கா படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா துப்பாக்கி முனையில் நடித்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது தன்ஷிகா. இவர் ஏற்கெனவே கபாலி படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தாலும் சோலோ ஹீரோயினாக உடேகர்ஷா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த அனுப் தாகூர் சிங் படத்தின் ஹீரோ, தன்ஷிகா ஹீரோயின். கபீர்சிங் வில்லன். வெண்ணிலா கபடி குழு கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவராஜ் தயாரிக்கிறார். பிரபல கன்னட இயக்குனர் சுனில்குமார் தேசாய் இயக்குகிறார்.