ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனின் 13வது படத்தை தயாரிக்கிறார் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார். ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் இணைந்து ராதிகா நடித்த காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது:
எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், பாசிட்டிவான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது.
ராதிகா இந்தப்படத்தில் சேர்ந்தது, படத்துக்கு இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகாவுக்கென்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது. அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. என்றார்.