‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
சுந்தர பாண்டியன், கொம்பன் போன்ற படங்கள் வந்தபோது, லட்சுமி மேனன் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. 'குடும்ப பாங்கான வேடமா; கூப்பிடுங்கள் லட்சுமி மேனனை' என்று தான், கோலிவுட்டும் கூறியது.
ஆனால், திடீரென, 'படங்களில் இனி நடிக்கப் போவது இல்லை' என, அவர் வெளியிட்ட குழப்பமான அறிவிப்பு, அவரது மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளி விட்டது. அதற்கு பின் அவர் நடித்த மிருதன், ரெக்க போன்ற படங்களும் சரியாக போகவில்லை. இதனால், சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது, யங் மங் சங் படத்தின் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதில், அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது, பிரபு தேவா. 'இந்த படம் வெளியானதும், லட்சுமி மேனனின் மார்க்கெட், மீண்டும் சூடு பிடித்து விடும்' என்கின்றனர், அவரது ரசிகர்கள்.